பாரதிராஜா, பாலசந்தர் போல் பெரிய டைரக்டராக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வருகிறார் சந்தோஷ் பிரதாப். ddஒருநாள் இரவு, அத்தை வீட்டுக்குப் போகும்வழி தெரியாமல் தவிக்கும் சாந்தினி தமிழரசனை சந்திக்கிறார். பல்வேறு காரணங்கள், சூழல்களால் சாந்தினி தமிழரசனை, அவரது சொந்த ஊரான நாகப்பட்டணம், பொறையார் அருகே இருக்கும் கிராமத்தில் கொண்டு போய்விடுகிறார். அங்கே கூடிய பஞ்சாயத்தாரின் தவறான தீர்ப்பால், சாந்தினியைத் திருமணம் செய்துகொண்டு, முதலிரவு முடிந்ததும் சென்னைக்கு கம்பி நீட்டுகிறார்.

Advertisment

அதன்பின் சாந்தினியின் நிலை என்ன? சந்தோஷின் நிலை என்ன என்பதுதான் "நான் அவளை சந்தித்தபோது.' ""இது எனது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம்'' என படம் முடிந்தபின் போடும் டைட்டில் கார்டில் சொல்கிறார் டைரக்டர் எல்.ஜி. ரவிசந்தர்.

ஆனால் உண்மைக் கதைக்குரிய அழுத்தமான சீன்கள் இல்லாமல் தத்தளிக்கிறது படம்.

அடுத்த படத்தையாவது கவனமாக பண்ணுங்க ரவிசந்தர்.